ஊரடங்கு முடிவடைகிறது. அரசு என்ன செய்யப் போகிறது? - ப.சிதம்பரம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா தொற்று பரவுவதை பாஜக அரசால் தடுக்க முடியாது எனவும், அரசின் நிர்வாக இயந்திரம் பழுதடைந்து கிடப்பதாகவும் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.


Advertisement

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,927ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 34,109ஆகவும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,872ஆக உயர்ந்துள்ளது.

image


Advertisement

இந்நிலையில் மூன்றாம்கட்ட ஊரடங்கு இன்றுடன் முடியவுள்ளது. அரசு அடுத்தக்கட்டமாக எந்தமாதிரியான நடவடிக்கையை எடுக்கவுள்ளது என பலரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று பரவுவதை பாஜக அரசால் தடுக்க முடியாது என ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

''நேற்று கொரோனா தொற்று 4675 பேருக்குப் பரவியது. தற்காப்பு நடவடிக்கைகளை ஒவ்வொரு மனிதரும் மேற்கொண்டு தொற்றுலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதே ஒரே வழி. கொரோனா தொற்று பரவுவதை பாஜக அரசால் தடுக்க முடியாது. காரணம், அரசின் நிர்வாக இயந்திரம் பழுதடைந்து கிடக்கிறது, இதைச் செய்யக் கூடிய உள்ளாட்சி அமைப்புகள் பல மாநிலங்களில் கிடையாது அல்லது அதிகாரங்களில்லாமல் இருக்கின்றன. ஊரடங்கு 3.0 இன்றுடன் முடிவடைகிறது. அரசு என்ன செய்யப் போகிறது?'' எனக் குறிப்பிட்டுள்ளார்


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement