JUST IN

Advertisement

“அணுசக்தி மற்றும் விண்வெளித் துறையில் தனியாருக்கு அனுமதி” - நிர்மலா சீதாராமன் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அணுசக்தி மற்றும் விண்வெளித் துறையில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.


Advertisement
 
 
இந்தியாவில் கொரோனா பொது முடக்கத்தில் முடங்கிய பொருளாதாரத்தை மீட்கப் பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கு நிவாரண திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார். அதற்கான திட்டங்களை நான்காவது நாளாக இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.  இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அவர் தொழில்துறை வளர்ச்சிக்குக் கொள்கை சீர்திருத்தம் தேவை என்றார். 
 
Image 
 
மேலும் அவர், ராணுவத் தளவாட உற்பத்தியில் தன்னிறைவை எட்டும் வகையில் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் பயன்படுத்தப்படும் என அறிவித்தர். அத்துடன் பாதுகாப்பு உபகரணங்களின் இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டில் கொள்முதல் செய்ய புதிய விதிமுறை அமல்படுத்தப்படும் எனப்படும் என்றார்.
 
தொடர்ந்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத் துறைக்கான பொருட்களைத் தயாரிப்பதில் இதுவரை 49% அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது 74 சதவீதம் அந்நிய முதலீட்டை அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது என்றார்.  அதனையடுத்து சீர்திருத்தங்கள் மூலமாக விமானங்களை இயக்குவதற்கான செலவை ரூ. 1000 கோடி வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 
Image
 
அதனைத் தொடர்ந்து மருத்துவத்துறைக் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டர்.  அணுசக்தித்துறை மற்றும் விண்வெளித் துறையில் தனியாருக்கு அனுமதி என அறிவித்தார். மருத்துவத்துறையில் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களைக் குணப்படுத்துவதில் கதிரியக்கத் தனிமங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. ஆகவே கதிரியக்கத் தனிமங்களைத் தயாரிப்பதில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் உணவுப் பதப்படுத்தும் துறையில் பயன்படுத்தப்படும் கதிரியக்க ஐசோடோப்புகளை உருவாக்கத் தனியார் பங்களிப்புக்கு அனுமதி கொடுக்க உள்ளதாகத் தெரிவித்தார்.  
 
Image
 
மேற்கொண்டு உரையாற்றிய நிர்மலா சீதாராமன் யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் பகிர்மான நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் என்றார்.
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement