[X] Close >

சிக்ஸ் பறந்தால் பாதிவிலையில் சிக்கன்: ஓட்டல்கள் தாராளம்!

Hotels-announce-offers-regarding-IND---PAK-matches

இந்தியா- பாகிஸ்தான் மோதும் போட்டியை முன்னிட்டு டெல்லி ஓட்டல்கள் தாராள சலுகைகளை வழங்கியுள்ளது.


Advertisement

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் இறுதியில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன. ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எழுப்பியுள்ள இந்தப் போட்டியை முன்னிட்டு டெல்லியில் உள்ள சில ஹோட்டல்கள் சலுகைகளை அறிவித்துள்ளது. 

ராஜேந்திர பேலஸ் என்ற ஓட்டலில் 3 பெரிய திரைகளில் போட்டி ஒளிபரப்பப்படுகிறது. இதனை காண வரும் ரசிகர்களுக்கு ஓட்டல் சார்பில் இந்திய அணியின் ஜெர்சி டி-சர்ட் வழங்கப்படுகிறது. மேலும், ஆட்டத்தின்போது பாகிஸ்தான் அணியில் விழும் ஒவ்வொரு விக்கெட்டிற்கும் 5 முதல் 20 சதவீதம் வரை உணவில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்திய அணியின் பேட்ஸ்மேன் குவிக்கும் ஒவ்வொரு பவுண்டரி மற்றும் சிக்சருக்கு சைவ மற்றும் அசைவ ஸ்டார்டர்கள் பாதி விலையில் வழங்கப்படும் என ஹோட்டல் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சிக்சர் பறந்தால் பாதி விலையில் சிக்கன் உள்ளிட்ட உணவு ஐயிட்டங்கள் கிடைக்கும். 
இதுகுறித்து அந்த ஓட்டல் உரிமையாளர் கூறும்போது, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதைவிட வேறு எதுவுமே பெரியது இல்லை. நாங்கள் அனைவருமே இந்தியாவின் வெற்றிக்கு அணிவகுத்து நிற்கிறோம் என்றும் தெரிவித்தார்.  
இதேபோல் டெல்லியில் உள்ள மேலும் பல ஓட்டல்களிலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close