JUST IN

Advertisement

 “சுயச்சார்பு என்பது தனிமைப்படுத்திக் கொள்ளும் கொள்கையல்ல” - நிர்மலா சீதாராமன் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
சுயச்சார்பு என்பது தனிமைப்படுத்திக் கொள்வதற்கான கொள்கையல்ல என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
 
Image
 
இந்தியாவில் கொரோனா பொது முடக்கத்தில் முடங்கிய பொருளாதாரத்தை மீட்கப் பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கு நிவாரண திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார். அதற்கான திட்டங்களை நான்காவது நாளாக இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.  இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அவர் தொழில்துறை வளர்ச்சிக்குக் கொள்கை சீர்திருத்தம் தேவை என்றார்.  
 
மேலும் பிறநாடுகளுடன் போட்டிப்போட நாம் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். ஜிஎஸ்டி போன்ற முக்கிய சீர்த்திருந்தங்களை பிரதமர் மோடி கொண்டுவந்துள்ளார் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.  ‘ஆத்ம நிருபர் பாரத்’ என்பதைக் குறித்து அதிகம் பேசினார். அதாவது சுயச்சார்பு என்பது தனிமைப்படுத்திக் கொள்வதற்கான கொள்கையல்ல என்பதை விளக்கினார்.
 
Image
முதலீடுகளை ஈர்க்கும் திறமையைக் கொண்டு மாநிலங்கள் தரவரிசை செய்யப்படும் என்றும் 8 துறைகளுக்கான அறிவிப்புகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன என்றும் அவர் கூறினார்.
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement