JUST IN

Advertisement

“மாஸ்டர் பட போஸ்ட் புரொடக்ஷன் வேலை தொடங்கியது” - இயக்குநர் லோகேஷ் அறிவிப்பு 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
‘மாஸ்டர்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கியுள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. இதனை ‘மாநகரம்’ மற்றும் 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இவருடன் விஜய் முதன்முறையாக இணைந்துள்ளார். இந்த இயக்குநரின் இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதினால் விஜய்யின் படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 
 
image
 
இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உலகம் முழுவதும் கொரோனா அச்சம் பரவி வருவதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளதால் ஒட்டு மொத்த திரை உலகமும் முடங்கியது. 
 
 
இதனிடையே, ‘மாஸ்டர்’ படம் பற்றி மற்றும் ஒரு சுவாரஸ்யமான தகவல் கசிந்துள்ளது.  இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்குக் கடைசி வரை தெரியப்படுத்தாமல் ரகசியம் காத்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
image
 
இந்நிலையில் ‘மாஸ்டர்’ படத்தில் போஸ்ட் புரொக்ஷன் வேலை ட் நடைபெற்று வருவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘எனது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கின” எனக் கூறியுள்ளார். ஆனால் அவர் படம் வெளியீடு தொடர்பாக எந்தத் தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை. மீண்டு படத்தின் வேலைகள் தொடங்கியுள்ளதால் விஜய்யின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
 
 
 
 
 
View this post on Instagram

Go ahead, make my day ✌?#MASTER #POSTPRODUCTION


Advertisement

A post shared by Lokesh Kanagaraj (@lokesh.kanagaraj) on

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement