JUST IN

Advertisement

மே 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு : மிசோரம் அரசு அறிவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மிசோரமில் மே 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு செய்யப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்திருக்கிறது.


Advertisement

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக மே 17 வரை பொது முடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதில் பல தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. மே 17ஆம் தேதிக்குப் பின்னரும் பொது முடக்கம் தொடரும் என்றும், அது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இந்நிலையில் மிசோரம் மாநிலத்தில் மே 31ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மருத்துவ வல்லுநர்கள் உள்ளிட்டோரிடம் பொது முடக்கம் நீட்டிப்பு தொடர்பாக நேற்று ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.

"கோலியும், ரோகித் சர்மாவும் பயிற்சியை மிஸ் செய்வார்கள்" - பிசிசிஐ

அதில் அனைவரும் பொது முடக்கத்தை நீட்டிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்ததால், தற்போது பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் சில தளர்வுகளுடன் இந்தப் பொது முடக்கம் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement