JUST IN

Advertisement

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10,000ஐ தாண்டியது : இன்று மட்டும் 434..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் இன்று 434 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 434 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,108 ஆக அதிகரித்துள்ளது.

image


Advertisement

அதேசமயம் 2வது நாளாகத் தமிழகத்தில் 500க்கு குறைவாக கொரோனா பாதிப்பு வந்துள்ளது. இன்று ஒரே நாளில் 359 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை 2,599 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 310 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 5,947 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement