விவசாயப் பொருட்களை விளம்பரப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இந்தியாவில் கொரோனா பொது முடக்கத்தில் முடங்கிய பொருளாதாரத்தை மீட்கப் பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கு நிவாரண திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார். அதற்கான திட்டங்களை மூன்றாவது நாளாக இன்று நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார். இன்றைய தினத்தில் விவசாயம், கால்நடை, மீன்வளம், பால்வளம் உள்ளிட்ட துறைகளுக்கான திட்டங்கள் இன்று அறிவிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
வேளாண் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு 1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். தமிழகத்தில் விளைவிக்கப்படும் மரவள்ளிக்கிழங்குகள் போன்றவற்றைச் சர்வதேச அளவில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விவசாயப் பொருட்களைச் சர்வதேச அளவில் விளம்பரப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி செலவிடப்படும் எனக் கூறினார். அந்த நிதி மூலம் சிறு, குறு தானியங்கள் மற்றும் ஆர்கானிக் பொருட்கள் விளம்பரப்படுத்தப்படும் என்றார்.
மீன்வளத்துறையை மேம்படுத்துவதற்காக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகக் குறிப்பிட்டார். மீன்பிடிப் படகுகள் மற்றும் மீனவர்களுக்குக் காப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், கொள்முதல், குளிர்பதனக் கிடங்கை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்படும் எனவும் அறிவித்தார்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!