JUST IN

Advertisement

“வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம்”- பேப்பர் பொம்மை தயாரிக்கும் தொழிலாளர்கள் வேதனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக பேப்பர் பொம்மை தயாரிப்பவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


Advertisement

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள செம்மங்குடி, வேட்டங்குடி, உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பேப்பர் பொம்மை தயாரிப்பு குடிசை தொழிலாக நடைபெற்று வருகிறது. கோயில் திருவிழாக்கள், பண்டிகை திருவிழாக்களை நம்பி உருவாக்கப்படும் இந்த பொம்மைகள் வண்ணம் பூசுவதற்கு காஞ்சி புரத்திற்கு அனுப்பிவைக்கப்படும். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொம்மைகளை காஞ்சிபுரத்திற்கு அனுப்பிவைக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் தற்போது வரை 20 லட்சம் மதிப்பிலான பொம்மைகள் முடங்கியுள்ளன.

image 


Advertisement


இது குறித்து தொழிலாளர்கள் கூறும்போது “ மண்பாண்டம் தொழில் நலிவடைந்ததால்தான் மாற்று தொழிலாக பேப்பர் பொம்மை தயாரிக்கும் தொழிலுக்கு மாறினோம். இப்போது இந்தத் தொழிலிலும் நாங்கள் முடக்கப்பட்டிருக்கிறோம். அரசு தொழில்களை ஊக்குவிக்கவும், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரவும் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் அறிவிப்புகளை வெளியிடுகின்றன.

பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: பெண் சிசுக் கொலையா என விசாரணை

image


Advertisement

சென்னை: ராயபுரம் மண்டலத்திற்கு தனித்திட்டம் - ராதாகிருஷ்ணன்

ஆனால் எங்களைப் போன்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட குடிசை தொழிலுக்கு எந்தக் கடன்களும் எளிதில் கிடைப்பதில்லை. அதைக் கேட்டு நாங்கள் தேசிய வங்கிகளுக்கு அலைந்ததுதான் மிச்சம். ஆம், வருமான வரி என்றாலே என்னவென்று தெரியாத எங்களிடம், வருமான வரி இருந்தால்தான் கடன் வழங்க முடியும் என வங்கிகள் விரட்டுகின்றன. இதனால் வேறு வழியில்லாமல் தனியார் வங்கிகளில் கடன்வாங்கி காலமுழுவதும் கடனிலே சிக்கித்தவித்து வருகிறோம் ஆகவே கொரோனா பாதிப்பில் இருந்து நாங்கள் மீண்டு வர குடிசை தொழில்களுக்கு நிபந்தனையற்ற கடன்கள் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement