JUST IN

Advertisement

சென்னை: ராயபுரம் மண்டலத்திற்கு தனித்திட்டம் - ராதாகிருஷ்ணன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் நேற்று 447 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9674 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 363 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,637 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement

image

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, ராயபுரத்தில் அதிகபட்சமாக 971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தப்படியாக கோடம்பாக்கத்தில் 895 பேரும், திருவிக நகரில் 699 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement

இந்நிலையில் சென்னையில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பை குறைக்க தனித்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர்,

image

முதல்வர் மற்றும் தலைமை செயலாளர் அறிவுரையின்படி செயல்பட்டு வருகிறோம். பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். இதனை உங்கள் பழக்கத்தில் கொண்டு வர வேண்டும். தொற்று அதிகம் உள்ள பகுதியில் சத்தான உணவுகளை கொடுத்து வருகிறோம். சிறிய தெருக்களில் வசிக்கும் மக்களுக்கு தொற்றுகள் பரவாமல் கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். சென்னையில் 70 ஆயிரம் பரிசோதனைகளை செய்து உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்


Advertisement

ஆயிரத்தை நெருங்கும் ராயபுரம்: சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு எவ்வளவு?

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement