போதைக்காக 'ஸ்பிரிட் கலந்த ஆயில்’: பொள்ளாச்சியில் இருவர் உயிரிழப்பு

Unable-to-get-liquor--2-men-die-in-pollachi-after-drinking-oil

பொள்ளாச்சி அருகே மதுபோதைக்காக ஸ்பிரிட் கலந்த ஆயிலை குடித்த இருவர் உயிரிழந்தனர்


Advertisement

பொள்ளாச்சி அருகே குரும்பபாளையத்தில் பைப் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தவர்கள் சுரேஷ் (27) மற்றும் உத்தராஜ் (30). இவர்கள் இருவரும் மதுபோதைக்காக தாங்கள் பணிபுரியும் தொழிற்சாலையில் குழாய்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஆயிலை, ஸ்பிரிட் கலந்து குடித்துள்ளனர். உடனடியாக இருவரும் சரிந்து விழுந்து உயிரிழந்தனர்.

image


Advertisement

இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தாலுகா காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பொதுமுடக்கத்திற்கு இடையே அமல்படுத்தப்பட்ட தளர்வுகளின்படி, சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.

 


Advertisement

image

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சிறுநீரை குடிக்கச் சொல்லி வற்புறுத்தல்: மனமுடைந்த இளைஞர் தற்கொலை!!

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement