JUST IN

Advertisement

மயக்கம்போட்டு இறந்தவருக்கு கொரோனா - மருத்துவமனைக்கு அழைத்து சென்றவர்களை தேடும் காவல்துறை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சாலையில் நடந்து செல்லும்போது மயக்கமடைந்து இறந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

image

(கோப்பு புகைப்படம்)


Advertisement

சென்னை ராயப்பேட்டை வி.எம் தெரு சந்திப்பு வழியாக கடந்த 12-ஆம் தேதி நபர் ஒருவர் நடந்து சென்றபோது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதனையடுத்து அருகிலிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கொரோனா பாதிப்பு முடிந்த பின்னரே கல்லூரிகள் திறக்கப்படும் -அமைச்சர் பேட்டி

image


Advertisement

(கோப்பு புகைப்படம்)

ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், அமிதாப்பச்சன்.... - ஆன்லைன் தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள்!

மேலும் இறந்த நபருக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இறந்த நபர் சென்னை ராயப்பேட்டை  பகுதியை சேர்ந்த 35 வயது நபர் என்பது தெரியவந்தது. மயக்கமடைந்த போது ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வந்த நபர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement