புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிய உரிமம் பெறாமல் எலி பேஸ்ட் விற்பனை செய்த கடைகளில் சோதனை நடத்திய காவல்துறையினர் 1000-க்கும் மேற்பட்ட எலி பேஸ்ட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எலி பேஸ்ட்டுக்களை உரிய அனுமதி பெற்ற வேளாண் விற்பனை நிலையங்கள் மற்றும் வேளாண் மருந்து கடைகளில் மட்டுமே விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மளிகைக் கடைகளில் எலி பேஸ்ட்களை உரிய அனுமதி இல்லாமால் விற்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து புதுக்கோட்டை மளிகைக் கடைகளில் சோதனை நடத்திய காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் தலைமையிலான குழு, 58 கடைகளில் உரிய அனுமதி மற்றும் உரிமம் பெறாமல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலி பேஸ்ட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது ஃபேக் டாஸ்மாக் 'லிங்க்': தேடிப்பிடித்து தடை செய்த போலீசார்!!
சொந்த ஊர் திரும்பிய மக்கள்... மதுரை மேலூர் பகுதியில் அதிகரித்த கொரோனா பாதிப்பு
இதனைத்தொடர்ந்து பேசிய போலீசார், புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி எலி பேஸ்ட் விற்கும் கடைகளின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உரிமம் பெற்ற வேளாண்மை விற்பனை நிலையம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை செய்யும் கடைகளில் மட்டுமே எலி பேஸ்ட்களை விற்க வேண்டுமென்றும் கூறியுள்ளனர்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி