மணப்பாறையில், மயங்கி கிடந்த நபரின் பணமான ரூ.1 லட்சத்தை குடும்பத்தினரிடம் சேர்ந்த போக்குவரத்து காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் போக்குவரத்து காவல் பிரிவில் காவலராக பணியாற்றி வருபவர் தோகைமலையை சேர்ந்த கணேசன் மகன் சரவணன்(30). இவர் கடந்த புதன் கிழமை பணி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, கோவில்பட்டி சாலையில் இருச்சக்கர வாகனத்தில் வந்த நபர் தவறி விழுந்து மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற பார்த்தபோது, மக்கள் கூறியது போலவே ஜவுளிக்கடை வாசலில் ஆண் ஒருவர் மயங்கி கிடந்துள்ளார். அவர் கொண்டுவந்த கைப்பையில் ரூபாய் ஒரு லட்சம் ரொக்கமும் இருந்துள்ளது.
திருமழிசை சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம்
உலக சாதனைக்காகக் காத்திருக்கும் பலாப்பழம் - ஆத்தாடி!
இதனையடுத்து விசாரித்தபோது அவர் காவல் நிலையம் எதிரில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வரும் பாண்டியராஜன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்த சரவணன், பாண்டியராஜன் மற்றும் அவர் வைத்திருந்த ரூ.1 லட்சம் ரொக்கத்தையும் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளார். காவலர் சரவணனின் நேர்மையை பாராட்டிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டிவேல் கடந்த வியாழக்கிழமை அவருக்கு வெகுமதி அளித்துள்ளார்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?