JUST IN

Advertisement

“உங்கள் திட்டங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டன” - பிரியங்கா காந்தி கவலை 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
 
 
உங்களுடைய திட்டங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டன என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
 
 
தன்னிறைவு திட்டத்தின் 2ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய  அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அப்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம்கள் அமைக்கவும் உணவு வழங்கவும் ரூ.11,000 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், நகர்ப்புற ஏழைகளை உள்ளடக்கிய 7,200 புதிய சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நகர்ப்புறங்களில் வீடற்றவர்களைத் தங்கவைக்கும் முகாம்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
 
image
 
 
மேலும் அவர் , புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்கள் விலையில்லா அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். அத்துடன் இலவச உணவுப் பொருட்களும் கொடுக்கப்படும். ஏழை மக்கள் ரேசன் கார்டுகள் இல்லையென்றாலும் இலவச உணவுப்பொருட்கள் பெறலாம். 8 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த உணவுத்திட்டம் வழங்கப்படவுள்ளது என்றார். இதற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
 
image
 
ஆனாலும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு திருப்தி அளிப்பதாக இல்லை என எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் குற்றச்சட்டை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தி அவரது ட்விட்டர் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் நடந்து நடந்து சோர்வடைந்த தனது குழந்தையைப் பெட்டியில் வைத்து இழுத்துக் கொண்டு போகின்ற காட்சிப் பதிவாகியுள்ளது.
 
image
 
அதனைச் சுட்டிக் காட்டியுள்ள பிரியங்கா காந்தி, ‘சோர்ந்து போன பாதங்களால் யாருடைய எதிர்காலம் வரையப்படுகிறது? பேரழிவு காலங்களில் இந்த இந்தியர்களைக் கூட வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியாவிட்டால் எப்படி? உங்கள் பேச்சுக்கள், திட்டங்கள் எல்லாம் நம்பிக்கை இழந்துவிட்டன. இந்த நடைகள் தங்கள் கிராமத்தை அடைந்தபின்பே நிறுத்தப்படும். அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று கூறியுள்ளார்.
 
 
 
 
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement