JUST IN

Advertisement

உங்களுக்குப் பிடித்த கேப்டன் யார் ? - மனந்திறந்த ஷிகர் தவான்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தனக்குப் பிடித்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு ? இந்திய பேட்ஸ்மேன் ஷிகர் தவான் பதிலளித்துள்ளார்.


Advertisement

சமீபகாலமாக தோனியுடனான அனுபவங்கள் குறித்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் பேசி வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் வேறு எதையாவது பேசினாலும் கூட, அவர்களிடம் தோனி குறித்து ஒரு கேள்வியையாவது தொகுப்பாளர் மற்றும் செய்தியாளர்கள் முன் வைத்துவிடுகின்றனர். இதனால் பேட்டியளிப்பவர்களும் தோனி குறித்த கருத்தைப் பேசிவிடுகின்றனர்.

 image


Advertisement

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் இர்ஃபான் பதானிடம் இன்ஸ்டாகிராம் நேரடி கேள்வி-பதில் நிகழ்ச்சியில் பங்கேற்ற தவான், தனக்குப் பிடித்த கேப்டன் தோனி எனப் பதிலளித்துள்ளார். அத்துடன் ரோகித் ஷர்மா தான் பேட்டிங்கில் தனக்குச் சிறந்த ஜோடி என்றும், தற்போதுள்ள இந்திய பேட்ஸ்மேன்களில் விராட் கோலியே சிறந்தவர் என்றும் கூறினார். தோனி மற்றும் விராட் கோலி தலைமையில் மட்டுமே விளையாடியுள்ளதாகவும், அதனால் தோனியை தேர்வு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 “நிரவ் மோடி என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டினார்” - லண்டன் நீதிமன்றத்தில் ஒளிபரப்பான வீடியோ

ரோகித் ஷர்மா ஒரு தனித்துவமான பேட்ஸ்மேன் என்றும், கடந்த உலகக் கோப்பையில் அவர் மிகவும் திறமையாக 5 சதங்களை அடித்ததாகவும் குறிப்பிட்டார். அத்துடன், ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் எனவும், கொரோனா வைரஸ் என்பது செய்திகள் மற்றும் பயத்தில் தான் இருக்கிறது எனவும் கூறினார். ஆனால் மக்கள் தைரியத்துடனே இருப்பதாகத் தெரிவித்தார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement