JUST IN

Advertisement

கொரோனா பாதிப்பில் 8-ஆம் இடத்திலிருந்து 2ஆம் இடம் ; தாங்குமா தமிழகம்? - கமல்ஹாசன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.


Advertisement

நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவை பொருத்தவரை கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 51 நாட்கள் ஆகிறது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,003 ஆக உள்ளது. மேலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,549 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,235 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆகவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3722 ஆகவும் உள்ளது.

பேருந்து மீது லாரி மோதி விபத்து : 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு


Advertisement

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 25,922 பேரும், குஜராத்தில் 9267 பேரும், தமிழகத்தில் 9227 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது. கொரோனா பாதிப்பில் 8ம் இடத்திலிருந்து 2ம் இடத்தை எட்டிப் பிடித்து விட்டது. காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு. தாங்குமா தமிழகம்” எனத் தெரிவித்துள்ளார்.

 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement