JUST IN

Advertisement

“என் மகளுக்கு அரசியலில் ஈடுபடும் ஆசை இல்லை” - கீர்த்தி சுரேஷ் தாய் பேட்டி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அரசியலில் ஈடுபடும் எந்தத் திட்டமும் இல்லை என அவரின் தாயார் விளக்கம் அளித்துள்ளார்.


Advertisement


இணையதளங்களில் சினிமா நட்சத்திரங்களின் படங்கள் குறித்தும் அவர்களின் சொந்த வாழ்க்கை குறித்தும் செய்திகள் வருவது இயல்பான ஒன்று. அந்த வகையில் கடந்த வருடம் இதே நாளில் நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்த செய்தி ஒன்று இணையத்தில் வைரலாக பரவியது.அந்தச் செய்தி என்னவென்றால், கீர்த்தி சுரேஷ் பா.ஜ.க வில் இணையப் போகிறார் என்பதுதான். அத்துடன் இந்தச்செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் கீர்த்தி சுரேஷ் பிரதமர் மோடியுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் வெளியானது.

image


Advertisement

இந்நிலையில் இது குறித்து தற்போது கீர்த்தி சுரேஷின் தாயாரான மேனகா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசும் போது, கீர்த்தி சுரேஷ் பிரதமர் மோடியுடன் எடுத்த கொண்ட புகைப்படம் எனது கணவர் சுரேஷ் பா.ஜ.க உறுப்பினர்களைச் சந்தித்த போது எடுத்த புகைப்படம். ஆகவே கீர்த்தி சுரேஷுக்கு அரசியலில் ஈடுபடும் எந்தத் திட்டமும் இல்லை” எனக் கூறியுள்ளார்.

image

விஜயுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் ’சர்கார்’ படத்தில் இறுதியாக நடித்திருந்தார். அதன் பின்னர் தெலுங்கு, மலையாளம் சினிமாவில் கவனம் செலுத்தி வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement