JUST IN

Advertisement

சாலையில் அடிப்பட்டுக் கிடந்த தொழிலாளி - 12 மணிநேரத்திற்குப் பின் மீட்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மும்பையிலிருந்து தனது உறவினர் வீட்டுக்கு சாலை வழியே பயணித்த புலம்பெயர்ந்த தொழிலாளி கார் விபத்தில் சிக்கியுள்ளார்.


Advertisement

மும்பை புறநகரில் உள்ள கல்யாண் நிறுவனத்தில் பணிபுரிந்த புலம்பெயர்ந்த தொழிலாளி ராம்தாஸ். ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாமல் தவித்து வந்துள்ளார். ஆகவே இவர் கடந்த வாரம் மும்பையிலிருந்து 350 கி.மீ தூரத்தில் ஜல்கான் பகுதியிலுள்ள அவரது சகோதரரின் இருப்பிடத்திற்கு நடந்தே பயணித்துள்ளார். சாலையில் பயணித்த இவர் மீது கடந்த புதன்கிழமை இரவு கார் ஒன்று மோதியுள்ளது. மும்பையிலிருந்து 70 கி.மீட்டர் பயணித்த நிலையில் இவ்விபத்து நேர்ந்துள்ளது. இன்னும் அவர் 300 கி.மீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டி இருந்தது.

image


Advertisement

இந்நிலையில் அவர் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நடந்த 12 மணிநேரம் கழித்து அதாவது அடுத்த நாள் ஷாஹாபூர் அருகே என்டிடிவி நிருபர் அவரைக் கண்டுள்ளார். அப்போது, ராம்தாஸ் முகத்தில் ஒரு ஆழமான காயம் ஏற்பட்டிருந்தது. மேலும் அவர் இரத்தக் காயத்துடன் இருந்துள்ளார். உடனே மருத்துவ உதவி கொடுக்கப்பட்டுள்ளது. உணவும் அளித்துள்ளனர்.

image

ராம்தாஸ், இது குறித்து "என்னிடம் பணம் இல்லை, அதனால் பயணம் செய்ய முடியவில்லை. என்னிடம் ஒரு தொலைபேசி கூட இல்லை" என்று கூறியுள்ளார். இந்நிலை, ராம்தாஸை மீண்டும் அதே சாலையில் அவரை என்.டி.டி.வி குழுவினர் 5 நாள் கழித்துக் கண்டுள்ளனர். அவர் ஒரு டிரக் டிரைவரிடம் பேசி நாசிக் வரை பயணிக்க உதவிக் கோரியுள்ளார். அவரும் அழைத்துக் கொண்டு வந்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement