“ஸ்டீவ் ஸ்மித்தை 4 பந்துகளில் வீழ்த்துவேன்” - வாய்விட்ட அக்தரை கிண்டல் செய்த ஐசிசி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை 4 பந்துகளில் பவுன்சர் போட்டு வீழ்த்துவேன் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப்  அக்தர் குறிப்பிட்டதை ஐசிசி கிண்டல் செய்துள்ளது.


Advertisement

இஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் இருந்து சமூக வலைத்தளங்களில் ஒரு கேள்வி கிரிக்கெட் ரசிகர்களுக்காக கேட்கப்பட்டிருந்தது. இதில் கிரிக்கெட் உலகின் சிறந்த 10 பேட்ஸ்மேன்கள் மற்றும் 10 பவுலர்களை ஜோடி சேர்த்து, இதில் எந்த ஜோடியை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்கப்பட்டிருந்தது.

image


Advertisement

அந்த லிஸ்ட்டில், விராட் கோலி - ஷேன் வார்னே, அன்வர் - பும்ரா, கேன் வில்லியம்சன் - முரளிதரன், ஸ்மித் - அக்தர், சச்சின் - ரஷித் கான், பாபர் அசாம் - மெக்ராத், கெவின் பீட்டர்சன் - ரபாடா, ரிக்கி பாண்டிங் - ஜோஃப்ரா ஆர்ச்சர், லாரா - வாக்னர், ஏபிடி வில்லியர்ஸ் - வாசிம் அக்ரம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

image

இந்தப் பதிவைக் குறிப்பிட்டு, ட்விட்டரில் கருத்து தெரிவித்த அக்தர் “நான் தொடர்ந்து மூன்று பவுன்சர்களை வீசி ஸ்மித்தை அடித்துவிட்டு, பின்னர் 4வது பந்தில் அவரது விக்கெட்டை சாய்ப்பேன்” என தெரிவித்திருந்தார். இதனை கிண்டல் செய்துள்ள ஐசிசி, தங்கள் ட்விட்டர் பக்கத்தில் அக்தரின் பதிவைக் குறிப்பிட்டு பிரபல கூடைப்பந்து வீரர் மைக்கெல் ஜார்டன் சிரிப்பது போல பதிவிட்டுள்ளது.


Advertisement

கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவியர் மருந்து - ராஜீவ்காந்தி மருத்துவமனை முடிவு ?

loading...

Advertisement

Advertisement

Advertisement