சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவர் கைது...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆண்டிபட்டி அருகே சிறுமியை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.


Advertisement

தேனி மாவட்டம் கடமலைகுண்டு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டில் இருந்து காணாமல் போனார். இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடி அச்சிறுமியை மீட்டனர்.

சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: 17 ...


Advertisement

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கர்ப்பிணிக்கு நேரில் சென்று உதவிய எம்எல்ஏ 

அப்போது அந்த சிறுமியிடம் காணாமல் போன சம்பவம் குறித்து விசாரித்தபோது அதே ஊரை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக சிறுமி கூறியுள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் கடமலைகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் ஸ்ரீராம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement