இன்றிரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இன்றிரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.


Advertisement

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மே 17ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய பொருளாதாரம் மற்றும் மக்களின் வருமானத்திற்காக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் பொதுமுடக்கத்தில் தளர்வுகளை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்து மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றன.

PM Modi-CMs Covid-19 meeting: What chief ministers said


Advertisement

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கர்ப்பிணிக்கு நேரில் சென்று உதவிய எம்எல்ஏ

அந்த வகையில் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழகத்தின் சார்பில் முதலமைச்சர் பழனிசாமியுடன், வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement