சென்னை: பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் இரவில் இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.


Advertisement

சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (34). இவர் நேற்று நள்ளிரவில் இயற்கை உபாதையை கழிக்க வீட்டிலிருந்து வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது திடீரென அவரின் காலை சுற்றிய பாம்பு அவரை கடித்ததாக தெரிகிறது. இதனால் ஆதிலட்சுமி பதறியடித்து கத்தியுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பாம்பு கடித்த இடத்தில் சுண்ணாம்பை தடவியுள்ளனர். பின்னர், அவரை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு ...


Advertisement

(கோப்புப் புகைப்படம்)

திருமழிசை சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்தது

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆதிலட்சுமி ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். உடலை கைப்பற்றிய கண்ணகி நகர் போலீசார் உடற்கூறு ஆய்விற்காக இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கண்ணகி நகரில் சுற்றித் திரியும் பாம்புகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement