இன்று மட்டும் சென்னையில் 538 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் இன்று ஒரே நாளில் 538 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் 798 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

image


Advertisement

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8002 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை 4,371 பேர் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர்.

image

இதுதவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தைக் காணலாம். அரியலூர் - 33, செங்கல்பட்டு - 90, தருமபுரி - 2, திண்டுக்கல் - 1, காஞ்சிபுரம் - 8, கன்னியாகுமரி - 1, மதுரை - 4, பெரம்பலூர் - 1, ராமநாதபுரம் - 4, ராணிப்பேட்டை - 1, தஞ்சை - 3, திருவள்ளூர் - 97, திருவண்ணாமலை - 10, தூத்துக்குடி - 3, வேலூர் - 1, விருதுநகர் - 2 என கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.


Advertisement

“விழுப்புரம் மாணவி கொலையில் விரைவு நடவடிக்கை வேண்டும்” - திருமாவளவன்

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 2,051 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 5,895 பேர் சிகிச்சை உள்ளனர். மேலும், 53 பேர் பலியாகியுள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement