"நெஞ்சை பதறவைக்கிறது" விழுப்புரம் மாணவி கொல்லப்பட்ட விவகாரத்தில் முதல்வர் கண்டனம் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விழுப்புரம் சிறுமதுரையில் சிறுமி ஜெயஸ்ரீ மிருகத்தனமாக கொல்லப்பட்ட செய்தி நெஞ்சை பதற வைக்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Advertisement

விழுப்புரம் மாவட்டத்தின் சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ என்பவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய இருவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இச்சம்பவத்துக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார் அதில் "விழுப்புரம் - சிறுமதுரையில் சிறுமி ஜெயஸ்ரீ மிருகத்தனமாக கொல்லப்பட்ட செய்தி நெஞ்சை பதற வைக்கிறது. இக்கொடூர செயலை வன்மையாக கண்டிக்கிறேன். சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இச்செயலில் ஈடுபட்டுவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்திருக்கிறார்.

 

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement