சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவில் தாமதம் !

IRCTC-website-down-delays-in-ticket-booking

சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு செய்யும் இணையதளமான ஐஆர்சிடிசி இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் முன்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


Advertisement

image

மே 12 ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதால் அதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளத்தில் மட்டுமே நடைபெறும் ரயில்வே கவுண்டர்களில் கிடையாது என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Advertisement

image

ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள ஐஆர்சிடிசி "சிறப்பு ரயில்களுக்கான விவரங்களை இணையத்தில் பதிவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் பிரச்னைகள் சரி செய்யப்பட்டு டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும்.சிரமத்துக்கு மன்னிக்கவும்." என தெரிவித்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement