சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடக்கம் ! - ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மே 12 ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதால் அதற்கான முன்பதிவு நாளை மாலை 4 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளத்தில் மட்டுமே நடைபெறும் ரயில்வே கவுண்டர்களில் கிடையாது என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Advertisement

image

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு மே 17 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மார்ச் 25 ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை. இந்நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகளும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.


Advertisement

இந்நிலையில் மே 12 முதல் பயணிகள் ரயில் சேவையை படிப்படியாகத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக 15 ஜோடி ரயில்கள் இயக்கப்படும். பயணச் சீட்டு உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் மட்டுமே ரயில்களில் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. ரயிலில் பயணம் செய்ய விரும்புவோர் கட்டாயமாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு ரயில் நிலையிலும் உடல் பரிசோதனை செய்யப்படும். கொரோனா பாதிப்பு இல்லாதவர்களும் ரயிலில் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

image

இந்தச் சிறப்பு ரயில்கள் புது டெல்லியிலிருந்து திப்ருகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புபனேஷ்வர், செகுந்தராபாத், பெங்களூர், சென்னை, திருவனந்தபுரம், மடகான், மும்பை சென்ட்ரல், அகமதாபாத் மற்றும் ஜம்மு தாவி ரயில் நிலையங்களிடையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement