இரட்டைத் தலைகொண்ட அரிய வகை பாம்பைக் கண்டு ஒடிசாவில் வனத்துறையினர் வியப்படைந்தனர்.
ஒடிசா மாநிலத்தின் கியோஞ்சர் மாவட்டத்தின் தென்கிகோட் வனப்பகுதிக்கு உட்பட்ட ஒரு வீட்டில் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. பாம்பைக் கண்ட வீட்டின் உரிமையாளர்கள் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் வனத்துறையினர் வீட்டிற்கு வந்து பாம்பைப் பிடித்துள்ளனர். அப்போது அந்தப் பாம்பிற்கு இரட்டைத் தலைகள் இருப்பதைக் கண்ட ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
அந்தப் பாம்பு விஷத் தன்மையற்ற வெள்ளிக்கோல் விரியன் இனத்தைச் சேர்ந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாம்பின் இரண்டு தலைகளும் சுதந்திரமாகச் செயல்பட்டது வனத்துறையினரை வியப்படையச் செய்துள்ளது. அத்துடன் இரண்டு தலைகளுமே தங்களுக்கான உணவை உண்டுள்ளன.
A rare wolf snake with two fully formed heads was rescued from a house in the Dehnkikote Forrest range of Keonjhar district in Odisha.
Later released in Forests. pic.twitter.com/7fE0eMciEB— Susanta Nanda IFS (@susantananda3) May 7, 2020
பின்னர் அந்தப் பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டுச்சென்றனர். இந்தப் பாம்பின் காணொளியை வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளதுடன், அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Loading More post
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்
தடுப்பூசிகளை முன்கூட்டியே கேட்டுப் பெற வேண்டும் - மத்திய அரசு அறிவுறுத்தல்
ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம் - மாநகர போக்குவரத்து கழகம்
ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!
தலைநகரை தவிக்கவைக்கும் கொரோனா: விழிபிதுங்கும் டெல்லி மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள்
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்