JUST IN

Advertisement

கோலியும் அவரது மனைவியும் மும்பை காவல்துறைக்கு தலா 5 லட்சம் நிதி 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
மும்பை காவல்துறை கொரோனா பாதுகாப்பு நிதிக்காக விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் தலா ரூ. 5 லட்சம் நிதியளித்துள்ளனர். 
 
நாட்டில் கொரோனா நோய்த் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதுவரை இந்திய அளவில் 59, 662 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய அளவில் மகாராஷ்டிர மாநிலம்தான் இந்த நோய்த் தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகப் பிரதமர் மோடி, பொதுமக்கள் நிதியளிக்க முன்வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து பலரும் பிரதமரின் பேரிடர் நிவாரணத்திற்காக நிதியளித்து வருகின்றனர். 
 
image
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் இணைந்து மும்பை காவல்துறையினர் நலனுக்காக தலா ரூ.5 லட்சம் நன்கொடை அளித்துள்ளனர். இது தொடர்பாக மும்பை காவல்துறை ஆணையர் பரம் பிர் சிங், ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "மும்பை காவல்துறை ஊழியர்களின் நலனுக்காக தலா ரூ .5 லட்சம் பங்களிப்பு செய்த விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் நன்றி. உங்கள் பங்களிப்பு கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருப்பவர்களைப் பாதுகாக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 
image
 
இதனிடையே கோலியும் அனுஷ்காவும் நாட்டிலுள்ள குடிமக்கள் அனைவரும் அரசினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.தற்போது வரை மகாராஷ்டிராவில் கொரோனாவால் மொத்தம் 19,063 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement