அஜித் போல சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறிய "தல" தோனி !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் அஜித் போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியும் "சால்ட் அண்ட் பெப்பர்" ஹேர் ஸ்டைல் லுக்கிற்கு மாறியுள்ளார். இப்போது அந்தப் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement

ஊரடங்கு காலத்தில் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலர் இன்ஸ்டா பக்கத்தில் தங்களுக்கு விருப்பமானவர்களுடன் நேரலையில் அரட்டை அடித்து வருகின்றனர். இது ஒரு புதிய ட்ரெண்ட் ஆக மாறியுள்ளது. தனிமனித இடைவெளியை அதிகம் அறிவுறுத்தப்படுவதால் பலரும் இந்தப் பக்கத்தை விரும்பி ஏற்றுள்ளனர்.

image


Advertisement

ஆனால், இந்த சமூக ஊடக உலகத்திலிருந்து தல தோனி பல ஆயிரம் மையில்களுக்கு அப்பால் உள்ளார். அவரைப் பற்றி பலரும் பேசுகிறார்கள். அவர் சர்வதேச போட்டிகளில் இருப்பாரா? இல்லை ஓய்வு எடுத்துக் கொண்டு விட்டாரா? எனப் பல ஊகங்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அவர் இதற்கெல்லாம் அசைவதாக இல்லை.

அண்மையில் கூட சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் தல தோனி குறித்த ஒரு காணொளியைப் பகிர்ந்து கொண்டுள்ளது. அந்த வீடியாவில் தோனி தனது பண்ணை வீட்டிலுள்ள ஒரு அழகான புல் தரையில் உட்கார்ந்திருந்தார். அருகில் அவரது மகள் ஜிவா நின்று கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் தங்களது செல்லப் பிராணியுடன் விளையாடினார்கள். இந்த வீடியோ ட்ரெண்டானது.

image


Advertisement

இந்நிலையில் இப்போது தோனியின் புதிய புகைப்படம் ஒன்றை அவரது மனைவி சாக்சி இன்ஸடாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அதில் தோனி சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் காணப்பட்டுகிறார்ர். அந்தப் புகைப்படம் தனது மகள் ஜிவாவுடன் தோனி விளையாடிக் கொண்டிருக்கும்போது எடுக்கப்பட்டது. ஏற்கெனவே தோனியை சென்னை ரசிகர்கள் "தல" என்று அழைப்பார்கள். தமிழ் சினிமாவின் "தல"யும் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் இருப்பார். இப்போது தல தோனியும் அதே ஸ்டைலுக்கு மாறியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement