[X] Close >

தமிழகத்தில் உள்ள டீ கடைகள் செயல்பட அனுமதி - முதல்வர் 

Government-of-Tamil-Nadu-has-given-permission-to-open-tea-shop
 
 
தமிழகத்தில் உள்ள டீ கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
 
இது தொடர்பாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள டீ கடைகள் செயல்படலாம் என்றும் காலை ஆறு மணி முதல் மாலை 7 மணிவரை  செயல்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
image
 
ஆனால் டீ கடைகளில் அமர்ந்தோ, நின்றோ டீ குடிக்கக் கூடாது. பார்சல் மட்டுமே வாங்கிச் செல்லலாம். மீறி அப்படி உட்கார்ந்து குடித்தால் உடனடியாக முடக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. வரும் 11 ஆம் தேதி முதல் இந்த நடைமுறைகள் அமலுக்கு வருகிறது என்று முதல்வர் தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 
 
image
 
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் 24 மணிநேரமும் செயல்பட முன்பே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close