[X] Close >

மதுரை: மதுபானக் கடைக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடிய மர்ம நபர்கள்

some-people-Deposit-of-fire-to-tasmac-in-madurai

மதுரை அருகே டாஸ்மாக் கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு தப்பியோடினர்.


Advertisement

கொரோனா வைரஸை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை நீங்கலாக தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கலாம் என அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

மார்ச் 31 வரை அவசர வழக்குகள் மட்டுமே ...


Advertisement

இதனைத்தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு முடியும் வரை மதுபானக் கடையை திறக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடினர்.

image

இதில், மதுபானக் கடைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து கடைக்கு அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதனால் மதுபானங்களில் தீப்பற்றாமல் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து போலீசார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close