ஆந்திராவில் நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டது எப்படி? - புதிய தகவல்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆந்திராவில் நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டது எப்படி என்பது தொடர்பாக பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


Advertisement

நச்சு வாயு கசிந்த எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலை, பிரிட்ஜில் பயன்படும் குளிர்விப்பான், தெர்மோகோல் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கிறது. 1961-ஆம் ஆண்டில் ஹிந்துஸ்தான் பாலிமர்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்ட ஆலை பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு தென்கொரியாவின் எல்ஜி நிறுவனத்தின் கைகளுக்கு 1997-ஆம் ஆண்டு வந்தது.

நிறுவனம் அளித்திருக்கும் தகவலின்படி 1800 டன் அளவுக்கு ஸ்டைரீன் வாயு திரவு நிலையில் ராட்சத டாங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. முழு முடக்கத்தின்போது 40 நாள்களாக ஆலை செயல்படவில்லை. தளர்வு அறிவிக்கப்பட்டு ஆலை செயல்பட அனுமதி கிடைத்ததும், பணியாளர்கள் முதற்கட்ட பராமரிப்புப் பணியை மேற்கொண்டு, இயந்திரங்களை இயக்குவதற்கு முயற்சி செய்துள்ளனர்.


Advertisement

விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் ...

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.170 கோடிக்கு மது விற்பனை ?

நீண்ட நாள்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்ததாலும், வெப்பநிலை மாற்றத்தாலும் ஸ்டைரீன் இருந்த டாங்குகளில் தாமாகவே சில வேதிவினைகள் நடந்திருக்கின்றன. அதனால் திரவ நிலையில் இருந்த ஸ்டைரீன் ஆவியாகி கசிந்து புகைபோக்கி வழியாக வாயுவாக வெளியேறிருக்கிறது. ஸ்டைரீன் வாயுவை உணர்ந்து எச்சரிக்கை ஒலியெழுப்பும் வகையிலான சைரன்கள் ஆலையில் இருக்கின்றன. கசிந்து வெளியான வாயு, வேதிமாற்றம் அடைந்ததால், சைரன்கள் செயல்படவில்லை என்று கூறப்படுகிறது.


Advertisement

Visakhapatnam Gas Leak: How gas leakage tragedy unfolded at ...

மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா பரவ காரணமான விமான நிறுவனம்

வேதிவினைக்கு உள்ளான ஸ்டைரீனைச் சமநிலைப்படுத்துவதற்குப் போதுமான ரசாயனங்களும் ஆலையில் கையிருப்பில் இல்லை. ஒரு மணிநேரத்துக்குள்ளாக கசிவு நிறுத்தப்பட்டாலும், அதற்குள்ளாக கசிந்து வெளியான வாயு காற்றில் பரவி மக்களைப் பாதித்திருக்கிறது. உடலுக்குள் சென்ற வாயு, நுரையை உருவாக்கி உயிரைப் பறித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எல்ஜி பாலிமர்ஸ் போல ஏராளமான ஆலைகள் ஸ்டைரீன் வாயுவைப் பயன்படுத்துகின்றன. அவையும் பல நாள்களுக்குப் பிறகு திறக்கப்பட இருக்கின்றன. அவற்றின் பாதுகாப்பு குறித்தும் இந்தச் சம்பவம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement