அருப்புக்கோட்டை அருகே உடன் பிறந்த தங்கையை கட்டையால் தாக்கி அண்ணனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கீழ்க்கண்ட மங்கலத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டி(60). இவரது மனைவி சந்திரமதி(55). இவர்களுக்கு சண்முகவடிவு(27), விஜயா(25), அம்சவள்ளி என்ற 3 மகள்களும், கணேஷ் பாபு(23) என்ற மகனும் உள்ளனர்.
கடைசி மகளான அம்சவள்ளி ராஜபாளையத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய அண்ணன் கணேஷ் பாபு(23) லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அம்சவள்ளியும், அதே ஊரைச் சேர்ந்த முருகேசபாண்டி என்பவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் தெரிகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா பரவ காரணமான விமான நிறுவனம்
இதுகுறித்து இரு குடும்பத்திற்கும் தெரியவந்ததால் திருமணம் செய்ய பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்தத் திருமணத்திற்கு கணேஷ்பாபு ஆரம்பக்கட்டத்திலேயே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். ஊரடங்கு உத்தரவினால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மதுக்கடை மூடியிருந்ததால் அமைதியாக இருந்த கணேஷ் பாபு நேற்று மது அருந்திவிட்டு போதையில் தன் உடன்பிறந்த தங்கையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் கணேஷ் பாபு அருகிலிருந்த கட்டையால் தங்கை அம்சவள்ளியைக் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த அம்சவள்ளி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கணேஷ் பாபு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.170 கோடிக்கு மது விற்பனை ?
பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் திருச்சுழி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்வரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சொந்த அண்ணணே தங்கையைக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்