வடகொரியா அதிபருக்கு அறுவை சிகிச்சை என வெளியான தகவல் உண்மையில்லை: தென்கொரியா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வடகொரியா  அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்ததாக தகவல் வெளியான நிலையில் அது உண்மையில்லை என தென்கொரியா தெரிவித்துள்ளது.


Advertisement


கிம் ஜாங் உன், கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதியிலிருந்து பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கு கொள்ளாமல் இருந்தார். இதனையடுத்து அவருக்கு இதய  அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அவரது உடல்நிலை மிக மோசமடைந்து உயிருக்கு போராடி வருவதாகவும் தகவல்கள் பரவின. இந்நிலையில்  யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த மே 1 ஆம் தேதி மீண்டும் பொதுநிகழ்வில் அவர் கலந்து கொண்டார். கிம் கலந்து கொண்ட புகைப்படங்களை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டு அவர் நலமுடன் இருப்பதை உறுதி செய்தது. இந்த புகைப்படங்களை பார்த்த ட்விட்டர்வாசிகள், கிம்மின் உடல் எடை அதிகமாகியிருப்பதாக தெரிவித்தனர்.


Advertisement

 


இந்நிலையில் தற்போது கிம்முக்கு அறுவை சிகிச்சை செய்ததற்கான அறிகுறிகள் இல்லை என்றும் கிம்மின் உடல்நிலை குறித்த தகவல்கள் வதந்தியே என்றும் தென்கொரியா உளவுத்துறை தெரிவித்துள்ளது.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement