JUST IN

Advertisement

காய்கறிகள் மூலமாகப் பரவுகிறதா கொரோனா? - எச்சரிக்கையுடன் இருப்பது எப்படி?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
காய்கறிகள் மூலமாக கொரோனா வைரஸ் பரவுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சந்தையில் காய்கறிகளை வாங்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? அவற்றைப் பாதுகாப்பான முறையில் எப்படிப் பயன்படுத்துவது? என்பதை தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாக உள்ளது.
 
image
 
கொரோனா ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு, நம் அச்ச உணர்வை ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கச் செய்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். அதனால், முன்பு நாம் வழக்கமாகப் பார்த்த அன்றாட நிகழ்வுகளைக்கூட, தற்போது சந்தேக உணர்வுடனேயே அணுகும் நிலை உருவாகியிருக்கிறது. அவற்றில் உணவுப் பொருட்கள் வாங்கும்போது நமக்கு எழும் சந்தேகங்கள் தான், இருப்பதிலேயே மிகச் சோதனையான ஒன்று. சந்தையில் பல்வேறு நபர்களின் கைப்பட்ட காய்கறிகளில் கொரோனா வைரஸ் இருக்குமா? அப்படி அதில் வைரஸ் ஒட்டியிருந்தால் அதை எப்படிப் பயன்படுத்துவது என்ற கேள்விகள், மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதுபோன்ற சூழலில் நாம் கடைகளுக்குச் செல்லும்போது பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும். 
 
image
 
காய்கறிகளை வாங்கச் சந்தைக்குச் செல்லும்போது வீட்டிலிருந்தே துணிப் பைகளை எடுத்துச் செல்வது முக்கியமான ஒன்று. ஒருவேளை கடையில் கொடுக்கப்பட்ட பையில் காய்கறிகளை வாங்கி வந்தால், அந்த பையை வீட்டிற்கு வெளியிலேயே அப்புறப்படுத்துவது நல்லது.
 
பெரும்பாலான மக்கள் காய்கறிகளைத் தொட்டுப்பார்த்து சோதித்தபின்னர்த்தான் வாங்குவார்கள். அதனால், கடையில் இருக்கும் காய்கறிகளைச் சாதாரண கைகளால் தொடாமல், கையுறைகளைப் பயன்படுத்தி வாங்குவது சிறந்தது. 
 
image
 
பின்னர், வெந்நீரில் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து அனைத்து காய்கறிகளை 2 நிமிடங்கள் வரை சுத்தமாகக் கழுவ வேண்டும். குறிப்பாகக் காய்கறிகளை கழிவதற்கு முன்பு கைகளைச் சோப்பு பயன்படுத்திச் சுத்தப்படுத்தி இருப்பது அவசியம். 
 
காய்கறிகளின் மேல் கொரோனா வைரஸ் படிந்திருக்க வாய்ப்பிருப்பதால், அதன் தோல் பகுதியை நீக்கிவிட்டு, நன்றாக வேக வைத்து உண்ண வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement