தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா தொற்று

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Advertisement

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றே 4 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. நேற்று 508 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலனவர்கள் கோயம்பேடு மார்க்கெட் உடன் தொடர்புடையவர்கள்.

image


Advertisement

இதனால், தமிழகத்தில் 4 ஆயிரத்து 58 ஆக இருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக 500க்கும் அதிகமானோருக்கு நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது. இதில், சென்னையில் மட்டும் 324 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக அரியலூரில் 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

image


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement