தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கும் அரசின் முடிவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.


Advertisement

தமிழகத்தில் மதுக்கடைகளை ஊரடங்கு நேரத்தில் திறப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பதிலளித்த தமிழக அரசு, டாஸ்மாக் மது விற்பனையை ஆன் லைனில் மேற்கொள்ள முடியாது என தெரிவித்தது.

அத்துடன் மதுவை வீடுதோறும் சென்று டோர் டெலிவரி செய்ய முடியாது என்றும், டாஸ்மாக் கடைகளில் சமூக விலகல் பின்பற்றப்படும், பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.


Advertisement

image

இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா ஆகியோர், டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் முடிவிற்கு தடைவிதிக்க மறுத்துவிட்டனர். அதேசமயம் சமூக விலகல், பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற என உத்தரவிட்டனர். மேலும், மதுபாட்டில்களை விற்பதிலும், வாங்குவதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.

கொரோனாவுக்கு மருந்து என வதந்தி பரப்பியதாக தணிகாசலம் கைது

இதைத்தொடர்ந்து நாளை முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பது உறுதியாகியுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement