JUST IN

Advertisement

ஒரே குடும்பத்தில் 12 பேருக்கு கொரோனா..! கோயம்பேட்டில் காய்கறி வாங்கியவர் மூலம் பாதிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை கோயம்பேட்டில் காய்கறி வாங்கியவருக்கு கொரோனா உறுதியான நிலையில், அவரது குடும்பத்தில் 12 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.


Advertisement

சென்னை வேளச்சேரியை சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவர் ஊரடங்கு காலத்தில் தினந்தோறும் 3 சக்கர வாகனத்தில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு தினமும் கோயம்பேட்டில் இருந்து அவரது மகன் காய்கறிகளை வாங்கிவந்து கொடுத்தார்.

image


Advertisement

இந்நிலையில் காய்கறி வாங்கிவந்த நபருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

image

இந்நிலையில், அவரது குடும்பத்தில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று வேளச்சேரி முன்னாள் இராணுவ குடியிருப்பு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா உறுதியானது. இதுதவிர அடையார் மண்டலத்தில் மொத்தம் 45 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

கார் மோகம்: அமெரிக்க சாலையில் வேகம் காட்டிய 5 வயது சிறுவன்- துரத்திப் பிடித்த போலீசார்!

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement