வளைகுடா நாடுகளில் இருக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் 46,433 பேருக்கு இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அவர்களில் 12 ஆயிரத்து 727 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 568 ஆகவுள்ளது. 32ஆயிரத்து 138 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,541. அதற்கு அடுத்தப்படியாக குஜராத்தில் 5804 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். டெல்லியில் தொற்றுக்கு ஆளாகியவர்கள் எண்ணிக்கை 4,898. ராஜஸ்தானில் 3061 பேரும், மத்திய பிரதேசத்தில் 2,942 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 2766 பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் வளைகுடாவில் இருக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது. மேலும் கொரோனாவின் கோரப்பிடியில் 84 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்டு வர வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மே 7 முதல் மே 13 ஆம் தேதி வரை 64 விமானங்களை இயக்கி மீட்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை திட்டமிட்டப்படி நடத்தினால் இதுவரை உலகிலேயே இதுதான் மிகப் பெரிய கொரோனா மீட்பு நடவடிக்கையாக கருதப்படும் என்றும் கூறப்படுகிறது.
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்