JUST IN

Advertisement

அமெரிக்காவில் ஆகஸ்ட்டுக்குள் 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் உயிரிழக்கலாம்: அதிர்ச்சி தகவல் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்காவில் கொரோனா பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்குள் சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் உயிரிழக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.


Advertisement

கொரோனாவை தடுக்க அமெரிக்காவில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொது முடக்கத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு பாதிக்கும் மேற்பட்ட மாகாணங்களில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

image


Advertisement

இந்தச் சூழலில், உயிரிழப்பு ஒரு லட்சத்தை கடக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று கவலை தெரிவித்திருந்தார். இதே போல், வாஷிங்டன் பல்கலைக்கழகமும் நோய் தொற்று குறித்து ஆய்வு நடத்தி, ஆகஸ்ட் மாதத்திற்குள் சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் உயிரிழக்கக் கூடும் என தெரிவித்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டது, தனிநபர் இடைவெளி பின்பற்றாதது போன்ற காரணங்களால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அந்த பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.

image

தொற்று உள்ளவர்கள், சரளமாக வெளியே நடமாடுவதால், வேகமாக நோய் பரவி வருவதாகவும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. தொற்று குறையும் வரை பொதுமக்கள் வீடுகளிலேயே இருப்பது தான், தற்போதைக்கு உகந்ததாக இருக்கும் என்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகம் அறிவுறுத்தி இருக்கிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement