JUST IN

Advertisement

செங்கல்பட்டில் ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா : திருவள்ளூரில் 18..

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 36 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

செங்கல்பட்டு மாவட்டத்தில் 97 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மேலும் 36 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இன்றும் மட்டும் பகுதி வாரியாக செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

image


Advertisement

அதன்படி, மதுராந்தகம் - 5, மேற்கு தாம்பரம் - 2, நசரத்புரம் - 18, கூடுவாஞ்சேரி - 4, ரங்கநாதபுரம் - 1, திருநீர்மலை - 2, பம்மல் - 3, ஜமீன் பல்லாவரம் - 1 என கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும், நேற்று வரை அங்கு 50 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

image

இதேபோன்று திருவள்ளூரில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு அறியப்பட்டுள்ளது. பூண்டி ஒன்றியத்தின் சிறுவானுர் பகுதியில் ஒருவருக்கும், கொசவன்பாளையத்தில் 6 பேருக்கும், ஆவடி, புழல் பகுதிகளில் தலா 3 பேருக்கும், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூரில் தலா 2 பேருக்கும், ஈக்காடு பகுதியில் ஒருவருக்கும் என மொத்தம் 18 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன்மூலம் திருவள்ளூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement

மக்களுக்கு நேரடியாக பணத்தைக் கொடுப்பதன் மூலம் பொருளாதாரம் மேம்படும் -அபிஜித் பானர்ஜி

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement