JUST IN

Advertisement

சிங்கப்பூரில் உள்ள இந்தியர்களில் 4,800 பேருக்கு கொரோனா தொற்று

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிங்கப்பூரில் உள்ள இந்தியர்களில் சுமார் 4 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அந்நாட்டுக்கான இந்திய தூதரகம் கூறியுள்ளது.


Advertisement

image

ஆதாரமில்லாமல் நடவடிக்கை எடுக்க முடியாது - உலக சுகாதார அமைப்பு


Advertisement

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 40,000 கடந்துள்ள நிலையில் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை இந்தியாவிற்கு கொண்டுவருவற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள இந்தியர்களில் சுமார் 4 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

image

சென்னையில் மண்டல வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?


Advertisement


மேலும் தொற்று ஏற்பட்டுள்ள இந்தியர்களில் பெரும்பாலோனோர் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான முகாம்களில் தங்கியுள்ளதாகவும் இந்திய  தூதரகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களிடம் மிக மெலிதான அறிகுறிகளே தென்படுவதாகவும் இவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும்  சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் தெரிவதாகவும் இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரஃப் கூறினார். சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் 3ஆயிரத்து 500 பேர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளதாகவும் தூதர் ஜாவேத் அஷ்ரஃப் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் சுமார் 18,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதும் 18 பேர் இறந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement