ஆதாரமில்லாமல் நடவடிக்கை எடுக்க முடியாது - உலக சுகாதார அமைப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வைரஸை சீனா வேண்டுமென்றே பரப்பியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இதற்கு சீனா மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் சீன ஆய்வகத்திலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவியதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளது என அமெரிக்கா அடித்து சொல்கிறது.


Advertisement

image

வாஷிங்டனிலிருந்து ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அதிபர் ட்ரம்ப் கொரோனா வைரஸ் விவகாரத்தில் பயங்கரமான தவறு செய்திருக்கும் சீனா, அதனை ஒப்புக்கொள்ள மறுக்கிறது எனக் குற்றஞ்சாட்டினார். கொரோனா வைரஸ் விவகாரத்தை சீனா மாஸ்க் போட்டு மறைக்க நினைக்கிறது என விமர்சித்த ட்ரம்ப், தீ போன்ற கொரோனா வைரஸை யாருக்கும் தெரியாமல் சீனா அணைக்க முயற்சித்தது என்றும் ஆனால் முடியவில்லை என தெரிவித்தார்.


Advertisement

மேலும் கொரோனா விவகாரத்தில் சீனாவின் வுகான் நகரில் என்ன நடந்தது என்பது குறித்து மிகவும் வலுவான அறிக்கையை விரைவில் வெளியிடுவோம் என்றும் டிரம்ப் கூறினார்.

image

இந்நிலையில், சீனாவிலிருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்பதற்கான எந்த ஆதாரத்தையும் அமெரிக்கா தங்களிடம் அளிக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. காணொலி மூலம் பேட்டி அளித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் மைக்கேல் ராயன், ஆதாரங்கள் இல்லாத நிலையில் தங்களால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்


Advertisement

கொரோனா வைரஸுக்கு மருந்தா?: திருத்தணிக்காசலம் மீது பாய்ந்த நடவடிக்கை

loading...

Advertisement

Advertisement

Advertisement