[X] Close >

சென்னை: 8 பெண் பயிற்சி காவலர்களுக்கு கொரோனா!

8-Trainee-police-Test-Positive-for-Coronavirus-in-chennai

சென்னையில் காவலர் பயிற்சி பள்ளியில், 8 பெண் பயிற்சி காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் நேற்று மட்டும், 12 ஆயிரத்து 863 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 527 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெருவாரியான நபர்கள் கோயம்பேடு சந்தை மூலம் தொற்றுக்கு ஆளானவர்கள் என சுகாதா‌ரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட‌வர்களின் எண்ணிக்கை 3550ஆக அதிகரித்துள்‌ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2107‌ பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். மற்ற 1409 பேர் சிகிச்‌சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

image


Advertisement

இந்நிலையில் சென்னையில் காவலர் பயிற்சி பள்ளியில் 8 பெண் பயிற்சி காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மவுண்ட் காவல் மாவட்டம், ஆயுதப்படை-II வளாகத்தினுள் கடந்த 3ம் தேதி முதல் இரண்டாம் நிலை காவலர்களுக்கான பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.

image

இந்த பயிற்சிக்கு மொத்தம் 57 பெண் பயிற்சி காவலர்கள் வந்துள்ளனர். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இவர்களில் 8 பெண் பயிற்சி காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement

காஷ்மீர் துப்பாக்கிச்சூடு: தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மரணம்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close