[X] Close

ஆன்லைனில் நேரலையாக திருமணம்: 5 லட்சம் பேர் கண்டுகளித்து வாழ்த்து!

Subscribe
Coronavirus--Couple-live-streams-into-own-wedding-amid-fears

சீனாவில் கட்டுப்பாடுகள் காரணமாக ஆன்லைனில் நேரலை செய்து திருமணம் நடந்தியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.


Advertisement

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தாலும், தனிமனித இடைவெளி, சுகாதாரம், தூய்மை போன்ற விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக திருமணம், பொதுவிழா போன்ற நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வரும் அக்டோபரில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொள்ள திட்டமிட்ட, ஜிஜியாங் மாகாணத்தை சேர்ந்த மணமகன் மா ஜியாலுன், கட்டுப்பாடுகளால் அதை கைவிட்டார்.

image


Advertisement

எனினும் திருமணத்தை விமரிசையாக நடத்த வேண்டும் என்ற உந்துதல் காரணமாக ஆன்லைன் பொழுதுபோக்கு நிறுவனத்தை அணுகியுள்ளார். இவரது ஆர்வத்தை புரிந்து கொண்ட அந்த நிறுவனம் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அவரவர் வீடுகளில் இருந்து திருமணத்தை பார்க்க வசதியாக ஆன் லைனில் நேரலை செய்ய ஏற்பாடு செய்தது. இதையடுத்து, மணமகன் மா, மணகள் ஜாங் யிதாங்கை சீன பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

image

இவர்களது திருமணத்தில் உறவினர்கள் யாரும் பங்கேற்காவிட்டாலும், ஆன்லைனில் சுமார் 5 லட்சம் பேர் வரை கண்டுகளித்து வாழ்த்துகளை பரிமாறி இருக்கின்றனர்.


Advertisement

சென்னையில் பணியாளர்கள் பாஸ் பெறுவது எப்படி..?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close