JUST IN

Advertisement

இஎஸ்ஐசி மருத்துவமனையில் ஆறு மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐசி மருத்துவமனையில் நான்கு பயிற்சி மருத்துவர் உட்பட மொத்தம் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

image

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதேசமயம் குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இருந்தாலும் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை விஸ்வரூபம் எடுத்துள்ளது. நான்கு நாள்களில் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மருத்துவர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், கோயம்பேடு மார்க்கெட் ஊழியர்கள் எனப் பலருக்கும் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு வருகிறது.


Advertisement

image

இந்நிலையில் கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஆண்கள் விடுதியில் காவலராக பணியாற்றி வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் கேகே நகர்ப் பகுதியில் இயங்கிவரும் இஎஸ்ஐசி மருத்துவமனையில் பணியாற்றி வந்த பயிற்சி மருத்துவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 4 பெண் பயிற்சி மருத்துவர்கள், 2 ஆண் மருத்துவர்களுக்கு மேற்கொண்ட சோதனையில் இந்த கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement