கொரோனா அச்சுறுத்தல்: வங்கியில் பணம் எடுக்க புதிய நடைமுறை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் வங்கிகளில் குவியாமல் ஆன்லைன் பணபரிவர்த்தனையை மேற்கொள்ளுமாறு வங்கிகள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், இணையவழி பணபரிவர்த்தனை மேற்கொள்ள முடியாதவர்களுக்காக புதிய விதிமுறைகளை இந்திய வங்கிகள் கூட்டமைப்பு அமல்படுத்தியுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட தேதிகளில் குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.


Advertisement

image

இதற்கு வங்கிக் கணக்கின் கடைசி எண்ணைக் கொண்டு வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நாட்களில் பணம் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, வாடிக்கையாளர்களின் கணக்கு எண்ணின் கடைசி எண் பூஜ்யம் அல்லது ஒன்று என இருந்தால் அவர்கள் மே 4ஆம் தேதி வங்கிகளில் பணம் எடுக்கலாம்.


Advertisement

வாடிக்கையாளர்களின் கணக்கு எண் 2 அல்லது 3 ஆகிய எண்களில் முடிந்தால் அவர்கள் மே 5ஆம் தேதியும்,4, மற்றும் 5 என முடியும் கணக்கு எண் கொண்டவர்கள் மே 6ஆம் தேதியும் வங்கிகளில் இருந்து பணத்தை எடுக்கலாம் என்ற நடைமுறையை வங்கிகள் அமல்படுத்தியுள்ளன.

image

வாடிக்கையாளர்களின் கணக்கு எண் 6 மற்றும் 7இல் முடிவடைந்தால் அவர்கள் மே 8ஆம் தேதியும், கணக்கு எண் 8 அல்லது 9இல் முடிவடைந்தால் அவர்கள் மே 11ஆம் தேதியும் பணத்தை எடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Advertisement

இந்த நடைமுறை மே 11ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அதன்பிறகு வாடிக்கையாளர்கள் எந்த தேதியில் வேண்டுமானாலும் வங்கிகளுக்குச் சென்று பணத்தை எடுக்கலாம் என்றும் இந்திய வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

''2001ல் புரிந்துவிட்டது'' - விஜய் சேதுபதியின் அரசியல் குறித்த கேள்விக்கு கமல் பதில்

loading...

Advertisement

Advertisement

Advertisement