வாடகைக்கு பணமில்லை: வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதால் சாலையில் குடியேறிய தொழிலாளி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கரூரில் வீட்டு வாடகை கொடுக்க முடியாததால் ஏழை தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

கரூர் அருகே உள்ள மூக்கனாங்குறிச்சி கிராமத்தில் வசிப்பவர் நாகராஜன். கட்டட தொழிலாளியான இவர் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் அப்பகுதியில் வசித்து வந்தார். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக வேலை இல்லாத காரணத்தால் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. இதனால் வீட்டை காலிசெய்யுமாறு வீட்டின் உரிமையாளர் வற்புறுத்தியுள்ளார்.

image


Advertisement

உரிமையாளரின் தொடர் வற்புறுத்தல் காரணமாக நாகராஜன் தனது மனைவி இரண்டு குழந்தைகள் மற்றும் வீட்டு பொருட்களுடன் வீட்டைவிட்டு வெளியேறினார். ஆனால் தங்குவதற்கு வேறு இடம் இல்லாத காரணத்தினால் வெள்ளியணை செல்லும் சாலை ஓரத்தில் தங்கினார்.

 வீட்டு வாடகை கொடுக்க முடியாததால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஒருவர் சாலையோரத்தில் தங்கியிருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வெள்ளியணை காவல் நிலைய போலீசார் சாலையோரத்தில் தங்கியிருந்த நாகராஜனிடம் விசாரணை நடத்தினர்.image

பின்னர் அவருடைய வீட்டு உபயோக பொருட்களையும் அவரது குடும்பத்தினரையும் சிறிய லாரியில் ஏற்றுக்கொண்டு வீட்டு உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்க வைப்பதற்காக அழைத்துச் சென்றனர்.


Advertisement

 ஊரடங்கை மதிக்காமல் சுற்றித்திரிந்த இளைஞர்களைக் கும்மி அடிக்க வைத்த போலீஸ் 

loading...

Advertisement

Advertisement

Advertisement