விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தமிழக அரசின் முத்திரையை வாகனத்தில் பதித்து, முறைகேடாக ஆட்களை சொந்த ஊர்களுக்கு அழைத்தச் சென்ற இருவர் காவல்துறையினரிடம் சிக்கிக்கொண்டனர்.
நத்தம்பட்டி சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், பேரிடர் மேலாண்மை முத்திரை பதித்த வேன் ஒன்று வருவதைக் கண்டு அதனை நிறுத்தியுள்ளனர். உள்ளே ஓட்டுநர் உள்பட 13 பேர் இருந்தது தெரியவந்ததை அடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்களில் சென்னையைச் சேர்ந்த ஆல்வின் என்பவர் அந்த வேனுக்கு சொந்தக்காரர் என்பது ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பாபு என்பவர் வாகனத்தை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.
இருவரும், சென்னையில் தங்கியிருந்த 11 பேரை அவர்களது சொந்த ஊர்களுக்கு முறைகேடாக அழைத்துச் சென்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து 13 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கொரோனா பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
‘ஊரடங்கால் மிட்டாய் விற்பனை இல்லை’ - 114 வயதில் உழைத்துச் சாப்பிடும் ‘மிட்டாய் தாத்தா’
இதுபோன்று சென்னையில் இருந்து எத்தனை பேர் அழைத்துவரப்பட்டனர், எங்கு இறக்கிவிடப்பட்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Loading More post
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
உயர்த்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை - எந்தெந்த பைக்குகள் தெரியுமா?
இந்தியாவில் சாமானியர்களுக்கு 'சாத்தியமில்லாத' வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகள்!
தினசரி கொரோனா பாதிப்பு 7,000-ஐ நெருங்கியது: தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
அதிதீவிரமாக பரவும் கொரோனா... நெருங்கும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் - முடிவுதான் என்ன?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!